சென்னை – ”பெத்த புள்ளயே சோறு போடல… எனக்கு சோறு போட்டது, புரட்சி தலைவி அம்மா தான்…” – என, அ.தி.மு.க., தேர்தல் விளம்பரத்தில் ஒரு பாட்டி நடித்தார்.
அவரே, ”வானத்துலயே பறக்கிறவங்களுக்கு, நம்மோட பிரச்சினை எப்படி தெரியும்… மக்களை பற்றியே கவலைப்படாத ஆட்சி, இனி எதுக்குங்குங்க, போதும்மா…” என , தி.மு.க., தேர்தல் விளம்பரத்திலும் நடித்துள்ளார் அந்த பாட்டி.
இந்த இரண்டு தேர்தல் விளம்பரங்களும், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., சார்ந்த, தொலைக்காட்சிகளில் வந்த வண்ணம் உள்ளது. இரண்டிலும் ஒரே பாட்டியே நடித்துள்ளார். அவர், சினிமா துணை நடிகையான கஸ்துாரி பாட்டி (67).
இவர் பல படங்களில் நடித்துள்ளார். அ.தி.மு.க., விளம்பரத்தில் நடிக்க, 1,500 ரூபாயும், தி.மு.க., விளம்பரத்தில் நடிக்க, 1,000 ரூபாயும் சம்பளமாக பெற்றுள்ளார்.
சென்னை, தேனாம்பேட்டையில் வசிக்கும், கஸ்துாரி பாட்டி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘இருபது நாட்களுக்கு முன், அம்மா விளம்பரம் எனக்கூறி, நடிக்க அழைத்தனர். நடித்து முடித்ததும், 1,500 ரூபாய் சம்பளம் தந்தனர்.
அதற்கு அடுத்த சில நாட்கள் கழித்து, இன்னொரு விளம்பர படத்தில் நடிக்க வேண்டும் என்று அழைத்தனர். ‘வானத்துலயே பறக்கிறவங்களுக்கு…’ என, துவங்கும் வசனத்தை பேசி முடித்ததும், கட்சி விளம்பரம் போல் இருக்கிறதே என, கேட்டேன்.
ஏற்கனவே, அம்மா விளம்பரத்தில் நடித்ததையும் கூறினேன். ‘அதனால் என்ன பரவாயில்லை’ எனக்கூறி, 1,000 ரூபாய் கொடுத்து அனுப்பினர்.
நான், எந்த கட்சியிலும் கிடையாது; யாரையும் ஆதரிக்கவும் இல்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும், எங்களை போன்ற வயதானவர்களுக்கு நல்லது செய்தால் போதும், என கூறொயுள்ளார் அந்தபாட்டி.
திமுக-அதிமுகவிற்காக கஸ்துாரி பாட்டி நடித்த விளம்பரம்: