Home Featured கலையுலகம் இந்தியப் படங்களிலேயே அதிகமானோரைக் கவர்ந்த முன்னோட்டம் “கபாலி” -17 மில்லியன்!

இந்தியப் படங்களிலேயே அதிகமானோரைக் கவர்ந்த முன்னோட்டம் “கபாலி” -17 மில்லியன்!

937
0
SHARE
Ad

சென்னை – இதுவரை வெளிவந்த இந்தியப் படங்களிலேயே முன்னோட்டம் (டிரெய்லர்-டீசர்) வெளியிடப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்த படமாகவும், இதுவரை வெளிவந்த படங்களின் முன்னோட்டங்களிலேயே அதிக அளவிலான பார்வையாளர்களைப் பெற்றிருக்கும் படமாகவும் கபாலி திகழ்கின்றது.

Kabali -You tube - screen shotஇதனைத் தொடர்ந்து அந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பும் ஏகத்துக்கும் எகிறியிருக்கின்றது.

மே 1ஆம் தேதி கபாலி முன்னோட்டம் வெளியிடப்பட்ட முதல் 3 நாட்களிலேயே 10 மில்லியனுக்கும் மேற்பட்ட இரசிகர்களை ஈர்த்தது. நேற்று மே 13ஆம் தேதியுடன், யூ டியூப் இணையத் தளத்தில் இதுவரை இந்த முன்னோட்டம் 17,2676,125 முறை பார்க்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பலர் இந்த முன்னோட்டத்தை ஆர்வத்தால் மீண்டும் மீண்டும் பார்த்ததும் இத்தகைய அபரிதமான எண்ணிக்கை உயர்ந்ததற்கான காரணமாகும். அதே சமயம் மீண்டும் மீண்டும் பார்க்கும் வண்ணம் கபாலி முன்னோட்டம் இருந்தது என்பது வேறு விஷயம்!

இருப்பினும், இதுவரை அதிகமாக பார்க்கப்பட்ட முன்னோட்டங்களாக இந்திப் படங்களான அமீர்கானின் தூம் 3 (Dhoom 3), சல்மான் கான் நடித்து வெளிவரப்போகும் சுல்தான் (Sultan) ஆகியவை திகழ்ந்தன.

தற்போது, அந்தப் படங்களின் சாதனைகளையும் முறியடித்துவிட்டு, இதுவரை வெளிவந்த இந்தியப் படங்களிலேயே, அதிகமான அளவில் முன்னோட்டம் பார்க்கப்பட்ட படமாக கபாலி திகழ்கின்றது.

கபாலி திரையரங்குகளில் வெளியிடப்பட இன்னும் ஒரு மாதம் ஆகலாம் என்பதால், இந்த முன்னோட்டத்தைத் தொடர்ந்து பார்க்கக் கூடிய பார்வையாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இனி நமக்குள் அடுத்து எழும் கேள்வி, ரஜினியின் கபாலியின் இமாலய முன்னோட்ட சாதனையை இனி எந்தப படம் முறியடிக்கும் என்பதுதான்!

எந்திரன் 2 -ஆக இருக்குமோ!

-செல்லியல் தொகுப்பு