Home Featured தமிழ் நாடு 100 சதவிகிதம் வாக்குகளை பதிவு செய்யுங்கள் – மக்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்!

100 சதவிகிதம் வாக்குகளை பதிவு செய்யுங்கள் – மக்களுக்கு ஜெயலலிதா வேண்டுகோள்!

433
0
SHARE
Ad

Jayalalithaசென்னை – தமிழகத்தில் நிலவும் வளமும், நலமும் தொடர்ந்திடும் வகையில், காலையிலேயே வாக்குச்சாவடிக்கு சென்று உங்கள் பொன்னான வாக்குகளை 100 சதவிகிதம் பதிவு செய்யுங்கள் என்று வாக்காளர்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

வாக்களிப்பது புனித கடமை.  இன்று நடைபெற்றுவரும் சட்டமன்றத் தேர்தலில் உங்கள் ஜனநாயக கடமையை தவறாமல் ஆற்ற, மீண்டும் உங்களை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என இன்று காலை ஜெயலலிதா கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice