Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: மலேசிய நேரம் 2.00 மணி நிலவரங்கள் – ஒரு வரிச் செய்திகளில்!

தமிழகத் தேர்தல்: மலேசிய நேரம் 2.00 மணி நிலவரங்கள் – ஒரு வரிச் செய்திகளில்!

419
0
SHARE
Ad

Selliyal Oruvari seithigalசென்னை – தமிழகத் தேர்தல்: மலேசிய நேரம் 2.00 மணி நிலவரங்கள்.

* முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்து; 2 நாட்கள் பொறுத்திருந்தால் மக்கள் தீர்ப்பு என்னவென்று தெரியும் என பேட்டியளித்துள்ளார்.

* சென்னை சாலிகிராமத்தில் விஜயகாந்த் குடும்பத்துடன் வாக்களித்தார்.

#TamilSchoolmychoice

* பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணிராமதாஸ் வாக்களித்தார்.

* காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடி அருகே உள்ள கண்டனூர் சிட்டாலாட்சி மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்தார்.

*தமிழகத்தில் ஆளும்கட்சிக்கு எதிராக பெரிய அலை வீசுகிறது என கனிமொழி பேட்டியளித்துள்ளார்.

* அதிமுக ஆதரவு என அழகிரி பேட்டியால் தி.மு.க. அதிர்ச்சி.

* நோட்டாவுக்கு வாக்களியுங்கள் என  நடிகர் பார்த்திபன் தகவல்.

* தி.மு.க– காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெறும் – ப.சிதம்பரம் பேட்டி.

* அனைவரும் வாக்களிக்க வேண்டும்:தமிழகம்,கேரளா,புதுவை மக்களுக்கு மோடி வலியுறுத்தல்.

*அதிமுகவின் வெற்றி வாய்ப்பு உறுதியாகிவிட்டது என வாக்களித்தபின் ஓ.பன்னீர்செல்வம் பேட்டி.

* கிருஷ்ணகிரியில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வாக்களித்தார்.