Home பொது செல்லியலின் இனிய பொங்கல் வாழ்த்துகள்

செல்லியலின் இனிய பொங்கல் வாழ்த்துகள்

1035
0
SHARE
Ad

Feature---Ponggal-wishesஜனவரி 14 – இன, மத பேதமின்றி அனைத்து இந்தியர்களும் மகிழ்வுடன் கொண்டாடி மகிழும் இன்றைய பொங்கல் திருநாளில் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை ‘செல்லியல்’ புலப்படுத்திக் கொள்கின்றது.

மலேசிய இந்தியர்களின் தகவல் பரிமாற்றத்திற்காகவும், தற்போதுள்ள பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளினால் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் மக்களின் ஆர்வத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலும் மலர்ந்திருக்கும் இணையத் தளம்தான் செல்லியல்.

மலேசியாவைப் பொறுத்தவரை அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான, ஒரு முறையான தமிழ் இணையத் தளம் இல்லை என்பதை கருத்தில் கொண்டு அந்த இடத்தை நிரப்புவதற்கு நாம் எடுத்துள்ள முயற்சிதான் செல்லியல்.

#TamilSchoolmychoice

மலேசிய இந்தியர்களில் பெரும்பாலோருக்கு, குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்கு தமிழில் எழுதப் படிக்கத் தெரியவில்லை. இருப்பினும் நமது சமுதாயம் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்வதில் அவர்களுக்கு இருக்கும் ஆர்வமும், இந்திய சமுதாயத்தின் அரசியல், சமுதாய, பொருளாதார பிரச்சனைகள் குறித்த அவர்களின் நோக்கங்களும் செயல்பாடும் தமிழ் தெரிந்தவர்களை விட அதிக அளவில் இருக்கின்றது என்பதையும் நாம் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.

எனவேதான், செல்லியல் தளத்தில் ஆங்கில செய்திகளும், தகவல்களும் இடம் பிடித்திருக்கின்றன. இதன் மூலம் அனைத்து தரப்பு மலேசிய மக்களையும் செல்லியல் சென்றடைய வேண்டும் என்பதே நமது நோக்கம்.

செல்லியலை தற்போதுள்ள அனைத்து நவீன தொடர்பு தளங்களுக்கும் ஏற்ற முறையில் உருமாற்றிக் கொண்டு முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற உன்னத நோக்கத்தையும், அதன்வழி நமது செம்மொழித் தமிழை அடுத்த கட்ட நவீன தொழில் நுட்ப யுகத்திற்குள் பயணிக்க வைக்க வேண்டும் என்ற தணியாத ஆர்வத்தையும், இவற்றை கூடிய விரைவில் செயலாக்கிக் காட்ட வேண்டும் என்ற உத்வேகத்தையும் செல்லியல் குடும்பம் தன்னகத்தே கொண்டிருக்கின்றது.

காலம் கனியும்போது இது குறித்த முறையான அறிவிப்புகள் வெளிவரும்.

உழவுத் திருநாளாக தமிழர்களின் வாழ்வியலோடு கலந்து விட்ட பழம் பெரும் கொண்டாட்டமான இந்த பொங்கல் நன்னாளில் அதனைக் கொண்டாடி மகிழும் அனைத்து இந்திய குடும்பங்களிலும், ஆனந்தமும், செல்வச் செழிப்பும், வளமையும் செழித்தோங்க எங்களின் நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகள்.