Home Featured தமிழ் நாடு தந்தி தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு: அதிமுக 102 – திமுக 69 – காங்கிரஸ் 10...

தந்தி தொலைக்காட்சி கருத்துக் கணிப்பு: அதிமுக 102 – திமுக 69 – காங்கிரஸ் 10 – இழுபறி நிலையில் 52 – பாமக 1

1434
0
SHARE
Ad

karunanithi-jayalalitha-சென்னை – தமிழகத் தேர்தலை முன்னிட்டு பிரபல தொலைக்காட்சி நிறுவனமான தந்தி டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தொகுதிவாரியாக எந்த தொகுதியில் எந்தக் கட்சிக்கு வாய்ப்புகள் அதிகம் என்பது போன்ற விவரங்கள் கடந்த சில நாட்களாக வெளியிடப்பட்டு வந்தன.

நேற்று தேர்தல் வாக்களிப்பு முடிவடைந்த பின்னர், இந்தக் கருத்துக் கணிப்பின் இறுதி நிலவர முடிவுகள் “மக்கள் யார் பக்கம்” என்ற நிகழ்ச்சியின் வழி நேற்றிரவு வெளியிடப்பட்டன. இந்த கருத்துக் கணிப்பு நிகழ்ச்சியை நடத்தி வந்த தந்தி தொலைக்காட்சியின் பிரபல தொகுப்பாளர் ரங்கராஜ் பாண்டே (படம்) இந்த முடிவுகளை வெளியிட்டார்.Rangaraj Pandey-Thanthi TV

அதன்படி தனிப் பெரும்பான்மை பெற்ற கட்சியாக அதிமுக உருவெடுக்கும். குறைந்த பட்சம் 102 தொகுதிகளை அதிமுக கைப்பற்றி தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்த கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்ட “மக்கள் யார் பக்கம்” என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபல பத்திரிக்கையாளரும், புதிய தலைமுறை பத்திரிக்கையின் ஆசிரியருமான மாலன் தனது கணிப்புடன் இந்த தந்தி டிவி கருத்துக் கணிப்பு ஒத்திருப்பதாகக் கூறினார்.

“அதிமுக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்பது எனது கணிப்பு. இதற்கு அடுத்த நிலையில் வரும் கட்சிக்கும் அதிமுகவுக்கும் இடையில் 30 சட்டமன்றத் தொகுதிகள் வித்தியாசம் இருக்கும்” என்றும் மாலன் (படம்) மேலும் தெரிவித்தார்.

Malan-440-x-215-(2)ரங்கராஜ் பாண்டே தொடர்ந்து வெளியிட்ட கருத்துக் கணிப்புகளின்படி, திமுக குறைந்த பட்சம் 69 தொகுதிகளைப் பெறும். காங்கிரஸ் 10 தொகுதிகளைப் பெறும்.

பாமக கட்சியின் சார்பில் அன்புமணி இராமதாஸ் போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில் அந்தக் கட்சி வெற்றி பெறும் என்பதால் குறைந்த பட்சம் ஒரு தொகுதியை பாமக வெல்லும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 52 தொகுதிகளில் இழுபறி நிலை ஏற்ப்பட்டுள்ளது. இங்கு அதிமுக, திமுக கட்சிகளில் ஏதாவது ஒன்று வெல்லக் கூடும் என்றும் அதே சமயம், தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக, நாம் தமிழர் போன்ற கட்சிகள் சில தொகுதிகளை வெல்லக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

-செல்லியல் தொகுப்பு