Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: வாக்களிப்பு சதவீத இறுதி நிலவரங்கள்!

தமிழகத் தேர்தல்: வாக்களிப்பு சதவீத இறுதி நிலவரங்கள்!

485
0
SHARE
Ad

Rajesh Lakhoni-TN Election Commissionerசென்னை : நேற்று நடைபெற்று முடிந்த தமிழகத் தேர்தலில், தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி (படம்) வெளியிட்ட சில முக்கிய வாக்களிப்பு சதவீத விவரங்கள்:

  • தமிழகத்தில் பதிவான மொத்த வாக்குகள் 73.76 சதவீதமாகும்.
  • இதில் அதிக பட்ச வாக்குகள் பதிவானது தருமபுரி மாவட்டத்தில்தான். இந்த தருமபுரி நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இருப்பவர் அன்புமணி இராமதாஸ்.
  • தருமபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு தொகுதியில். 88.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • இரண்டாவதாக, அன்புமணி இராமதாஸ் போட்டியிடும் பென்னாகரம் தொகுதியில் 87.61 வாக்குகள் பதிவாகியுள்ளன. இதுவும் தருமபுரி மாவட்டத்தை உள்ளடக்கியதாகும்.
  • 87.55 சதவீத வாக்குகளைப் பதிவு செய்து மூன்றாவதாக அதிக பட்ச வாக்குகளைப் பதிவு செய்த தொகுதி குளித்தலை சட்டமன்றத் தொகுதியாகும். இது கரூர் மாவட்டத்தில் உள்ள தொகுதியாகும்.
  • சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி சட்டமன்றத் தொகுதியில் 85. 7 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • மிகக் குறைந்த வாக்குகள் பதிவானது சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில்தான். இங்கு 55.27 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
  • தனித் தனியாகப் பார்க்கும்போது பெரும்பாலான தொகுதிகளில் சராசரியாக 80 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.