Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: வாக்களிப்புக்கு பிந்திய கருத்துக் கணிப்புகளில் முரண்பாடான முடிவுகள்!

தமிழகத் தேர்தல்: வாக்களிப்புக்கு பிந்திய கருத்துக் கணிப்புகளில் முரண்பாடான முடிவுகள்!

645
0
SHARE
Ad

AIDMK-DMK-LOGOசென்னை – பொதுவாக வாக்களிப்புக்கு பின்னர் வாக்களித்து விட்டு வெளியேறும் வாக்காளர்களிடம் நடத்தப்படும் கருத்துக் கணிப்புகள் ஓரளவுக்கு ஒரு தேர்தலின் நிலைமையை எடுத்துக் காட்டும்.

ஆனால் நேற்று நடந்து முடிந்த தமிழகத் தேர்தலில் பல அமைப்புகளும், தகவல் ஊடகங்களும் நடத்திய வாக்களிப்புக்கு பிந்திய கருத்துக் கணிப்புகள் முரண்பாடான முடிவுகளைக் காட்டுகின்றன.

தேர்தல் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையில் கடுமையாக போட்டி நிலவியிருப்பதைக் காட்டுகின்றன.

#TamilSchoolmychoice

‘டைம்ஸ் நௌ’ என்ற தொலைக்காட்சி ஊடகத்தின் கருத்துக் கணிப்பு 140 தொகுதிகள் வரை அதிமுக வெல்லும் என தெரிவித்துள்ள நிலையில், மற்றொரு தகவல் ஊடகமான இந்தியா டுடே, அதிமுக 100 தொகுதிகள் வரை மட்டுமே பெறும் என்றும்  130க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளது.

இன்னும் இரண்டு கருத்துக் கணிப்புகள் திமுவுக்கே வெற்றி வாய்ப்பு எனத் தெரிவித்தாலும், இந்த கருத்துக் கணிப்புகளின் பின்னணி என்ன, எத்தகைய வாக்காளர்களைக் கொண்டு இந்த கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன என்பது போன்ற விவரங்களால் இவற்றின் நம்பகத்தன்மை கேள்விக் குறியாகி உள்ளன.

பல்வேறு கருத்துக் கணிப்புகளும் மாறி மாறி – வெவ்வேறு முடிவுகளைத் தெரிவிப்பதால், எந்தக் கட்சி இறுதியில் வெல்லும் என்பதை உறுதிபடச் சொல்ல முடியாத சூழ்நிலை இந்தத் தேர்தலில் ஏற்பட்டுள்ளது.

நேற்று தந்தி தொலைக்காட்சி நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகளின்படி அதிமுக 102 தொகுதிகள் குறைந்த பட்சம் பெறும் என்றும், தனித்த பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

நெருக்கடியான சூழ்நிலையில் கூட்டணி ஆட்சி ஏற்படக் கூடிய சூழலும் இருப்பதாக சில தகவல் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.