Home Featured தமிழ் நாடு தமிழகத் தேர்தல்: தென்காசி தொகுதி 56வது வாக்களிப்பு மையத்தில் நாளை மறு வாக்குப் பதிவு!

தமிழகத் தேர்தல்: தென்காசி தொகுதி 56வது வாக்களிப்பு மையத்தில் நாளை மறு வாக்குப் பதிவு!

553
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512சென்னை – நேற்று தமிழகத்தில் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்களிப்பு நடந்து முடிந்திருக்கும் நிலையில், தென்காசி சட்டமன்றத் தொகுதி 56வது வாக்களிப்பு மையத்தில் மீண்டும் நாளை மறுவாக்குப் பதிவு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளைக் காலை 7 மணிக்குத் தொடங்கும் மறு வாக்களிப்பு, மாலை 6 மணி வரை நடைபெறும் என்றும் இந்த வாக்களிப்பு மைய வாக்காளர்கள் அனைவரும் மீண்டும் வாக்களிக்க வேண்டும் என்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்த தொகுதியில் அதிமுக சார்பில் சி.செல்வமோகன்தாஸ் என்பவரும், திமுக-காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் கட்சியின் பழனி நாடாரும் இங்கு முக்கிய வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

#TamilSchoolmychoice

இவர்களைத் தவிர சீமானின் நாம் தமிழர் கட்சி, பாஜக, பாமக, தமாகா ஆகிய கட்சிகளும் இங்கே போட்டியிடுகின்றன.