Home Featured நாடு வெடிகுண்டுப் புரளி: சுபாங்கிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் அவசரத் தரையிறக்கம்!

வெடிகுண்டுப் புரளி: சுபாங்கிலிருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் அவசரத் தரையிறக்கம்!

568
0
SHARE
Ad

Sky11சுபாங் – சுல்தான் அப்துல் அசிஸ் ஷா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அனைத்துலக விமானம் ஒன்றில், வெடிகுண்டு இருப்பதாக எழுந்த புரளியை அடுத்து, அவ்விமானம் உடனடியாகத் தரையிறக்கப்பட்டது.

நேற்று செவ்வாய்கிழமை இரவு 7.40 மணியளவில் சுபாங் விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூரை நோக்கி விமானம் புறப்பட்ட போது, 8 மணியளவில் இரண்டு மர்ம அழைப்புகள் வந்துள்ளன.

அவ்விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக ஆண் ஒருவர் தெரிவித்ததாக பெட்டாலிங் ஜெயா ஓசிபிடி துணை ஆணையர் மொகமட் சைனி சே டின் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“உடனடியாக விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறை அவ்விமானத்தைத் தொடர்பு கொண்டு விமான நிலையத்திற்கே திரும்பும் படி கட்டளையிட்டது. 8.20 மணியளவில் அவ்விமானம் அவசரமாகத் தரையிறக்கம் செய்யப்பட்டது” என்றும் மொகமட் சைனி தெரிவித்துள்ளார்.

எனினும், விமானத்தில் முழுவதுமாகச் சோதனை நடத்திய வெடிகுண்டு நிபுணர்கள், சந்தேகத்திற்கு இடமாக எந்த ஒரு வெடிபொருளும் இல்லையென உறுதிப்படுத்தினர்.

அதனையடுத்து, இரவு 11.40 மணியளவில் அவ்விமானம் 30 விமானிகள் மற்றும் 4 பணியாளர்களுடன் மீண்டும் சிங்கப்பூரை நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.