Home Featured இந்தியா மேற்கு வங்காளத்தில் மம்தா, அசாமில் பாஜக, கேரளாவில் இடதுசாரிகள் முன்னிலை!

மேற்கு வங்காளத்தில் மம்தா, அசாமில் பாஜக, கேரளாவில் இடதுசாரிகள் முன்னிலை!

724
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512இந்தியாவில் நடைபெற்ற மேற்கு வங்காளம், கேரளா, அசாம் மாநிலத் தேர்தல்களின் இறுதிக் கட்ட நிலவரங்கள்:

கேரளா

  • கேரளாவில் 80 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளடக்கிய இடது சாரிக் கூட்டணி முன்னணி வகிக்கிறது.
  • காங்கிரஸ் கூட்டணி 49 தொகுதிகளில் முன்னணி வகிக்கின்றது.
  • கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை இழக்கும்.
  • நடப்பு முதல்வர் உம்மன் சாண்டிக்கு எதிராக எழுந்த சில ஊழல் புகார்கள் காங்கிரஸ் தோல்விக்குக் காரணமாகப் பார்க்கப்படுகின்றது.
  • பாஜக 3 தொகுதிகளில் முன்னணி வகிக்கின்றது.

மேற்கு வங்காளம்

  • மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 174 தொகுதிகளிலும், கம்யூனிஸ் கட்சிகள் 59 தொகுதிகளிலும் பாஜக 11 தொகுதிகளிலும் முன்னணி வகிக்கின்றன.
  • இங்கு மம்தா மீண்டும் ஆட்சி அமைப்பார்.
#TamilSchoolmychoice

அசாம்

  • அசாமில் 46 தொகுதிகளில் பாஜகவும், 16 தொகுதிகளில் காங்கிரசும் முன்னணி வகிக்கின்றன. இங்கும் காங்கிரஸ் ஆட்சியை இழக்கும். பாஜக ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகியுள்ளது.