Home Featured தமிழ் நாடு பெரியார், அண்ணா, எம்ஜிஆர் படங்களுக்கு ஜெயலலிதா மலர் தூவி மரியாதை!

பெரியார், அண்ணா, எம்ஜிஆர் படங்களுக்கு ஜெயலலிதா மலர் தூவி மரியாதை!

609
0
SHARE
Ad

Jayalalithaசென்னை – தமிழக முதல்வராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து சென்னை அண்ணா சாலை ஜெமினி மேம்பாலத்திற்கு அருகில் உள்ள பெரியார் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த பெரியார் புகைப்படத்திற்கு ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பிற்பகல் 2.00 மணிக்கு (இந்திய நேரம்) இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் பின்னர் சென்னை அண்ணா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு கீழே உள்ள அண்ணாவின் புகைப்படத்திற்கும் ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

#TamilSchoolmychoice

அண்ணா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின்னர், எம்ஜிஆர் சிலைக்கும் ஜெயலலிதா மரியாதை செலுத்தினார். ஸ்பென்சர் வணிக மையத்திற்கு அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு கீழே உள்ள எம்ஜிஆர் புகைப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இன்று மாலை 5.00 மணியளவில், அதிமுக தலைமை அலுவலகத்தில் வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ஜெயலலிதா சந்திக்கின்றார். அந்த சமயத்தில் ஜெயலலிதாவை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகாரபூர்வமாக தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.