சென்னை – இன்று மாலை சென்னையிலுள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஜெயலலிதா அதிமுக சட்டமன்ற பேரவைத் தலைவராக அதிகாரபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அவர் மாநில ஆளுநர் ரோசய்யாவைச் சந்தித்து, ஆட்சி அமைக்கும் உரிமை கோருவார்.
எதிர்வரும் மே 23ஆம் தேதி அவர் அதிகாரபூர்வமாக தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ளார்.
Comments