Home Featured இந்தியா அசாமில் 60 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கின்றது பாஜக! சர்பானந்தா முதல்வராவார்!

அசாமில் 60 தொகுதிகளில் வென்று ஆட்சி அமைக்கின்றது பாஜக! சர்பானந்தா முதல்வராவார்!

934
0
SHARE
Ad

கௌஹாத்தி – இந்தியாவின் வடமேற்கு பிரதேசத்தில் முதன் முறையாக தனது அரசியல் சிறகுகளை விரித்துக் கால்பதிக்கின்றது பாரதிய ஜனதா கட்சி. இந்தப் பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான அசாமில், தனது பரம வைரியான காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து மொத்தமுள்ள 126 தொகுதிகளில், 60 தொகுதிகளை பாஜக பெற்றுள்ளது.

tarun-gogoi-assam cm -தருண் கோகோய்…

இந்த மாநிலத்தை ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி 26 தொகுதிகளுடன் பலத்த தோல்வியைச் சந்தித்துள்ளது. நடப்பு மாநில முதல்வர் தருண் கோகோய் தனது மகன் கௌரவ் கோகோய்யை முன்னிறுத்தி நடத்திய அரசியல் காரணமாகத்தான் காங்கிரஸ் தோல்வி கண்டதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

கௌரவ் கோகோய் தற்போது நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார்.

நடப்பு முதல்வர் தருண் கோகோய் மூன்று தவணைகளாக 2001ஆம் ஆண்டு முதல் அசாமின் முதல்வராக இருக்கின்ற காரணத்தால் அவர் மீதான எதிர்ப்புணர்வுகள் மாநிலம் முழுவதும் அதிக அளவில் மேலோங்கி இருந்தன.

sarbananda-sonowal-assamஅசாமின் புதிய முதல்வராக பாஜக சார்பில் சர்பானந்தா சொனோவால் (படம்) தேர்ந்தெடுக்கப்படவிருக்கின்றார். இவர்தான் எங்களின் முதல்வர் வேட்பாளர் என இவரை முன்னிறுத்தித்தான் பாஜக பிரச்சாரம் செய்தது.

பாஜகவுடன் இணைந்து கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அசாம் கண பரிஷத் 14 தொகுதிகளை வென்றுள்ள நிலையில், மற்றொரு பாஜக கூட்டணிக் கட்சியான போடோலேண்ட் கட்சி 12 தொகுதிகளைகளையும் வென்றிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாஜக கூட்டணி மொத்தம் 86 தொகுதிகளைக் கைப்பற்றியிருக்கின்றது.

வடமேற்கு பிரதேசத்தில் தனது அரசியல் ஆதிக்கத்தைப் பரப்பத் தனக்குக் கிடைத்த ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, அசாமில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும், மேம்பாடுகளையும் கொண்டு வர பாஜக முனைப்புடன் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

-செல்லியல் தொகுப்பு