Home Featured உலகம் வெள்ளை மாளிகை பாதுகாப்பு வளையத்தில் ஆயுதத்தோடு நுழைந்தவன் சுடப்பட்டான்!

வெள்ளை மாளிகை பாதுகாப்பு வளையத்தில் ஆயுதத்தோடு நுழைந்தவன் சுடப்பட்டான்!

579
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512வாஷிங்டன் – அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையின் பாதுகாப்பை வளையத்தை மீறி ஆயுதத்தோடு நுழைந்தவன் ஒருவன் பாதுகாப்புப் படையினரால் சுடப்பட்டான். உடல் பகுதியில் சுடப்பட்ட அவன், தற்போது அமெரிக்க வெள்ளை மாளிகை பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டான்.

அவனது உடல்நிலை விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

வெள்ளை மாளிகையின் வடக்குப் பகுதி நுழைவாயிலில் பாதுகாப்பு வளையத்தை மீறி நுழைய முயன்ற அந்த சந்தேக நபர், தனது துப்பாக்கியை வெளியே எடுத்த போது, பாதுகாவலர்கள் அவனை நோக்கி சுட்டனர்.

#TamilSchoolmychoice

அப்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அந்தப் பகுதியில் இல்லை என்றும், இருப்பினும் நிலைமை குறித்து அவருக்கு விளக்கம் தரப்பட்டது என்றும் வெள்ளை மாளிகை பாதுகாப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். வெள்ளை மாளிகையில் உள்ள அனைவரும் பத்திரமாக உள்ளனர், அனைவரும் கணக்கெடுக்கப்பட்டுள்ளனர் என்றும் பாதுகாப்புப் படையினர் அறிவித்துள்ளனர்.

(மேலும் விவரங்கள் தொடரும்)