Home Featured நாடு மெர்சிங் அருகே 12 மலேசியர்களுடன் மீன் பிடிப் படகு மாயம்!

மெர்சிங் அருகே 12 மலேசியர்களுடன் மீன் பிடிப் படகு மாயம்!

603
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512ஜோகூர் பாரு – மெர்சிங் அருகே புலாவ் ஆவுர் கடற்பகுதியில், 12 மலேசியர்களோடு மீன் பிடிப்படகு ஒன்று மாயமாகிவிட்டதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மீன் பிடிக்கச் சென்ற அவர்களிடமிருந்து நேற்று வரை எந்தத் தகவலும் இல்லாத காரணத்தால், படகு உரிமையாளர் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாக, கோத்தா திங்கி ஓசிபிடி கண்காணிப்பாளர் ரஹ்மட் ஓத்மான் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice