Home Featured நாடு பினாங்கு முன்னாள் மஇகா சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் வி.முத்துசாமி காலமானார்!

பினாங்கு முன்னாள் மஇகா சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் வி.முத்துசாமி காலமானார்!

521
0
SHARE
Ad

Selliyal-Breaking-News-3-512கோலாலம்பூர் – பினாங்கு மாநிலத்தின் மஇகா பிரமுகரும், முன்னாள் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் வி.முத்துசாமி இன்று கோலாலம்பூரில் உள்ள இருதய நோய் மருத்துவமனையில் (ஐஜேஎன்) காலமானார்.

அவரது இறுதிச் சடங்குகள் பட்டவொர்த்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

வி.முத்துசாமியின் மனைவி வள்ளி முத்துசாமி ஆவார். இவர் மஇகாவின் முன்னாள் தேசிய மகளிர் பகுதித் தலைவி என்பதோடு, செனட்டராகவும் பணியாற்றியுள்ளார்.

#TamilSchoolmychoice

மஇகாவில் வி.முத்துசாமி தீவிர ஈடுபாடு கொண்டவர். காவல் துறை (போலீஸ்) அதிகாரியாக பணிபுரிந்த அவர் பின்னர் சட்டம் படித்து வழக்கறிஞரானார். மத்திய செயற்குழு உறுப்பினராகவும் அவர் பணியாற்றியுள்ளார். பினாங்கு மாநில மஇகாவில் அவர் பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

அண்மையக் காலமாக அவர் இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார் என்றும், விரைவில் அவர் இருதய அறுவைச் சிகிச்சை செய்து கொள்ளவிருந்தார் என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.