Home Featured தமிழ் நாடு ‘ஜெ’ பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின்! வெங்கய்யா நாயுடு!

‘ஜெ’ பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலின்! வெங்கய்யா நாயுடு!

796
0
SHARE
Ad

jayalalithaaசென்னை – தேர்தல் திருவிழா முடிந்து இன்று தமிழக முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பதவியேற்கும் வைபவம் மிக விமரிசையாக நடைபெறவிருக்கின்றது. சென்னையின் முக்கிய இடங்களிலும், தமிழகத்தின் முக்கிய நகர்களிலும் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான திரைகளில் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழா நேரலையாக ஒளிபரப்பப்படுகின்றது.

அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

stalinபிரதமர் நரேந்திர மோடி தற்போது வெளிநாட்டுப் பயணம் காரணமாக, ஈரானில் இருப்பதால், அவரது சார்பில் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஜெயலலிதாவைச் சந்திக்க முடிவதில்லை என சில பாஜக தலைவர்கள் கூறிய வேளையில் அவரைச் சந்திப்பதில் எனக்குப் பிரச்சனை இருந்ததில்லை என வெங்கய்யா நாயுடு கூறியது தேர்தல் பிரச்சாரங்களின்போது அதிகமாகப் பேசப்பட்டது.

#TamilSchoolmychoice

ஆந்திராவின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

naiduதமிழகம் முழுவதும் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் சென்னையில் திரளுவார்கள் என்பதால், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மக்கள் பதவியேற்கும் வைபவம் நடைபெறும் சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தை நோக்கி வரும் மாற்று பயணப் பாதைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை மரினா கடற்கரையில் பல இடங்களில் பிரம்மாண்டமான திரைகள் அமைக்கப்பட்டு ஜெயலலிதாவின் பதவியேற்பு விழா நேரலையாக ஒளிபரப்பாகின்றது.