ஜெயலலிதா தனது போயஸ் கார்டனில் உள்ள இல்லத்திலிருந்து புறப்பட்டு சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தை வந்தடைந்துள்ளார்.
அவரது இல்லத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தை நோக்கி அவர் செல்லும் வழியெல்லாம் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் அதிமுக கொடிகளுடன் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
அவர் வரும் வழியெங்கும் எந்தவித பதாகைகளும் (பேனர்கள்) வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
(மேலும் செய்திகள் தொடரும்)
Comments