லாஸ்யா கலாலயத்தின் தோற்றுனர் “மதுர நாட்டிய மாமணி” திருமதி குருவாயூர் உஷா துரையின் கைவண்ணத்தில் ஆதி சங்கரர் இயற்றிய பாடங்களையும் வேத உபநிடதங்களையும் ஒருங்கமைத்து நாட்டிய நாடகமாக சாந்தானந்தா அரங்கம், நுண்கலை கலாலயத்தில் அரங்கேறுகிறது.
குருவாயூர் உஷா துரை இந்தியாவின் தலைச்சிறந்த மிருதங்க வித்துவான்களில் ஒருவரான ‘கலைமாமணி’ குருவாயூர் துரை அவர்களின் ஒரே மகள். இசைக்காகவும், கலைக்காகவும் வாழ்நாள் முழுவதையும் அர்பணித்த ஒரு இசைக்குடும்பத்தில் இருந்து வந்தவர்.
சிறுவயதில் தனது சொந்த அத்தையான பிரபல கர்நாடக இசைப் பாடகி குருவாயூர் பொன்னம்மாளிடம் முறைப்படி சங்கீதம் கற்ற உஷா துரை, அதன்பிறகு புகழ்பெற்ற கர்நாடக இசைப் பாடகர் நெய்வேலி சந்தான கோபாலன் அவர்களிடம் சங்கீதத்தில் மேலும் பல நுணுக்கங்களை கற்றுத் தெரிந்துகொண்டவர்.
(மதுரநாட்டிய மாமணி குருவாயூர் உஷா துரை)
ஸ்ரீஆதிசங்கரரின் மூலப் படிவத்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த நாட்டிய நாடகத்திற்கு வாத்திய ரத்னாகரா சசிதரன் நாயர் இசையமைத்துள்ளார்.
‘மதுரநாட்டிய மாமணி’ குருவாயூர் உஷா துரை நாட்டிய வடிவமைப்பு மேற்கொள்ள, லாஸ்யா கலாலயத்தின் உதவித் தலைவர் அப்துல்லா அப்துல் ஹமிட், குணரத்னம் வேலாயுதம், குமரன் பொன்னுசாமி, கௌரி பூபாலன், பெட்ரிசியா அருள்ராஜ், நிரோஷினி ரெங்கநாத், ஜெய்சங்கரி, ஐஸ்வர்யா கணேசன், ஷாமினி சந்திரன், சங்கரி அட்ரேன் பிரான்சிஸ், கிருத்திகா இராமச்சந்திரன் ஆகியோர் அபிநயம் வழங்கவுள்ளனர்.
அழைப்பிதழ் பெற விரும்புவோர் திருமதி உஷா (0193237434)/ திருமதி மாடசாமி (019-2769312) / திருமதி ஜெகன் (016-252 0063) ஆகியோரைத் தொடர்பு கொள்ளலாம்.
லாஸ்யா கலாலயம் பற்றியும், அதன் தோற்றுனர் திருமதி குருவாயூர் உஷா துரை அவர்கள் பற்றியும் அறிந்து கொள்ள இந்த இணைப்பை (http://www.selliyal.com/archives/38468) அழுத்துக.