Home நாடு மார்ச் 27 கோலாலம்பூரில் – ‘உலகத் தமிழ் காப்பிய மாநாடு 2015’

மார்ச் 27 கோலாலம்பூரில் – ‘உலகத் தமிழ் காப்பிய மாநாடு 2015’

885
0
SHARE
Ad

Kaappiam

கோலாலம்பூர், பிப்ரவரி 13 – “காப்பியங்களில் அறிவியல் கோட்பாடும், சமுதாயச் சிந்தனை வெளிப்பாடு” என்ற கருப்பொருளில் ‘உலகத் தமிழ் காப்பிய மாநாடு 2015’ வரும் மார்ச் 27- 28-ம் தேதிகளில், தலைநகர் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் அமைந்திருக்கும் லாஸ்யா கலாலயத்தில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டை லாஸ்யா கலாலயமும், தினகரன் நுண்கலை கலாலயமும்  இணைந்து நடத்தவுள்ளது. வரும் மார்ச் 27-ம் தேதி மாநாட்டு நிகழ்வும், அதற்கு அடுத்த நாள் மார்ச் 28-ம் தேதி, காப்பியம் நாட்டியம் அரங்கேற்றமும் நடைபெறவுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு, “காப்பியங்களில் அறிவியல் கோட்பாடும், சமுதாயச் சிந்தனை வெளிப்பாடு” என்ற கருப்பொருளில் கட்டுரை படைக்க விரும்புவர்கள், மாநாட்டின் முழுக் கட்டுரையும் வரும் 28 பிப்ரவரி 2015 தேதிக்குள், 5 -6 பக்கத்திற்குள், ஏற்பாடு குழுவினரிடம் tfatrust.tinakaran@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி வாயிலாக சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுக்கு தமிழகத்தின் மக்கள் தொலைக்காட்சி நிறுவனமும், மலேசியாவில் ஓம்தமிழ் தொலைக்காட்சி நிறுவனமும் ஊடகப் பங்குதாரர்களாக ஆதரவு வழங்கவுள்ளன.

இந்நிகழ்வில் கலந்து கொள்ள கட்டண விவரங்கள் பின்வருமாறு:-

50 ரிங்கிட் (மாநாடு மட்டும்)

100 ரிங்கிட் (மாநாடு + நாட்டிய அரங்கேற்றம்)

50 ரிங்கிட் (மாநாடு + நாட்டிய அரங்கேற்றம்) – மாணவர்களுக்கு மட்டும்

பங்கேற்பாளர்களுக்குச் நற்சான்றிதழ் வழங்கப்படும். மேல் விபரங்களுக்கு +60143279982 என்ற எண்ணைத் தொடர்புக் கொள்ளவும்.