Home நாடு மஇகா மறுதேர்தல்: தலைவர் பதவிக்கு சுப்ரா போட்டியிடக்கூடும்!

மஇகா மறுதேர்தல்: தலைவர் பதவிக்கு சுப்ரா போட்டியிடக்கூடும்!

800
0
SHARE
Ad

Datuk Seri Dr S.Subramaniamபெட்டாலிங் ஜெயா, பிப்ரவரி 13 – மஇகா தேசியத் தலைவர் பதவிக்கு நடப்பு தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு எதிராக துணைத்தலைவர் டாக்டர் எஸ்.சுப்ரமணியம் போட்டியிடவுள்ளார் என்பது சில தகவல்கள் மூலம் உறுதியாகியுள்ளது.

இதற்கான அறிவிப்பை சுப்ரா வரும் ஞாயிற்றுக்கிழமை வெளியிடுவார் என்றும் மஇகா வட்டாரங்கள் கூறுகின்றன.

தலைநகர் ஜாலான் செந்தூலில் உள்ள எச்ஜிஎச் மாநாட்டு மையத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை கிளைத் தலைவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும், அங்கு சுப்ரா தனது முடிவை அறிவிப்பார் என்றும் முன்னாள் மத்திய செயலவை உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளதாக தி ஸ்டார் இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“துணைத்தலைவர் பதவிக்குப் போட்டியிட மற்றொருவருக்கு தலைவர் ஏற்கனவே அனுமதி அளித்துவிட்டார். எனவே அந்த பதவிக்கு நிச்சயம் சுப்ரா போட்டியிட இயலாது. ஆனால் அவர் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார்.” என்றும் அந்த உறுப்பினர் கூறியுள்ளார்.

சுப்ரா தலைவர் பதவிக்குப் போட்டியிடுவது கட்சிக்கு மிகவும் நல்லது என்றும் பெயர் வெளியிட விரும்பாத உயர் பதவியில் உள்ள மஇகா உறுப்பினர் கூறியுள்ளார்.

மேலும், தலைவர் பதவிக்கு டத்தோ சரவணன் போட்டியிட்டால், வாக்குகளை பிரிப்பார். இதனால் மீண்டும் பழனிவேல் வெற்றி பெறுவார் என்றும் கூறப்படுகின்றது.

பழனிவேலுக்கு எதிராக சுப்ரா போட்டியிட்டு வெற்றி பெற்றால், மஇகா வரலாற்றில் முதல் முறையாக நடப்பு தலைவரை போட்டியிட்டு வெற்றி பெற்றதாகக் கருதப்படும்.

காரணம் இதுவரை இருந்த தலைவர்கள் அனைவரும் போட்டியின்றி வெற்றி பெற்றிருக்கிறார்கள், அல்லது பதவி விலகி மற்றவர்களுக்கு வழி விட்டிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகின்றது.

கடந்த 2013-ம் ஆண்டும் மஇகா தேர்தலில், பழனிவேலுக்கு எதிராக சுப்ரா போட்டியிடுவதாக இருந்த நிலையில், இவர்கள் இருவரோடு, டத்தோ சரவணன், டத்தோ எஸ்.கே தேவமணி ஆகியோர் பிரதமர் நஜிப் துன் ரசாக்கை சந்தித்த பிறகு அம்முடிவு கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.