Home அவசியம் படிக்க வேண்டியவை சிலாங்கூரில் மேலும் 3 தமிழ் பள்ளிகள் : கமலநாதன்

சிலாங்கூரில் மேலும் 3 தமிழ் பள்ளிகள் : கமலநாதன்

591
0
SHARE
Ad

பந்திங் – கடந்த பொதுத் தேர்தலின்போது கூடுதலான தமிழ்ப்பள்ளிகள் நிறுவப்படும் என தேசிய முன்னணி அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து சிலாங்கூரில் மேலும் 3 தேசிய வகை தமிழ்த் தொடக்கப் பள்ளிகள் கட்டப்படும் என கல்வித்துறை துணையமைச்சர் பி.கமலநாதன் (படம்) தெரிவித்துள்ளார்.

P.KAMALANATHAN-300x221இதன் மூலம் இந்திய சமுதாயத்தின் கல்வி நிலை மேம்படும் என்றும், இந்தியர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் அவர்கள் தமிழ்ப் பள்ளிகளின் மூலம் கல்வி கற்க வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

கிள்ளான், பெட்டாலிங் ஜெயா, செராஸ் ஆகிய 3 இடங்களில் இந்தப் புதிய பள்ளிகள் கட்டப்பட உள்ளன.

#TamilSchoolmychoice

“அண்மையில் 7 புதிய தமிழ்த் தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும் என பிரதமர் வெளியிட்ட அறிவிப்புக்கு ஏற்ப இந்த 3 பள்ளிகள் கட்டப்பட உள்ளன,” என்றார் கமலநாதன்.

பந்திங், சுங்கை மங்கிஸ் SRJKT பள்ளியில் இரண்டு புதிய வகுப்பறைகள் கட்டுவதற்காக 3 லட்சம் ரிங்கிட் தொகையை பள்ளி நிர்வாகத்திடம் அண்மையில் வழங்கிய நிகழ்வு ஒன்றில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தோட்டப்புறங்கள் அழிக்கப்பட்டு பல பகுதிகளில் இந்தியர்களின் எண்ணிக்கை குறைந்ததாலும், சில புதிய வீடமைப்பு பகுதிகளில் இந்தியர்களின் மக்கள் தொகை அதிகரித்ததாலும், சில தமிழ்ப் பள்ளிகள் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்றும், சில புதிய தமிழ்ப் பள்ளிகள் கட்டப்பட வேண்டும் என்றும் இந்திய சமுதாயம் நீண்ட காலமாகவே அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்து வருகின்றது.