கெய்ரோ – இதுவரை கிடைக்கப்பட்டுள்ள மனித சடலங்களின் பாகங்களை ஆய்வு செய்த எகிப்து விசாரணை அதிகாரிகள், எகிப்துஏர் விமானம் எம்எஸ்804 வெடிகுண்டால் தகர்க்கப்பட்டிருக்கலாம் என்ற முடிவுவுக்கு வந்துள்ளதாக அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானம் பறந்து கொண்டிருந்த போது, கழிவறையில் இருந்து புகை வந்ததற்கான சமிக்ஞைகள் பதிவாகியுள்ளதாக தகவல் வந்துள்ள நிலையில், விமானத்தில் குண்டு வெடித்திருக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
நேற்று திங்கட்கிழமை எகிப்து விசாரணை அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு ஒன்றில், விமானம் நடுவானில் 37,000 அடி உயரத்தில் சென்று கொண்டிருக்கும் போது, திடீரென திரும்பியதாக முன்பு வெளியான செய்திகளை மறுத்தனர்.
இதன் மூலம் விமானம் தனது வழக்கமான பாதையில் தான் சென்று கொண்டிருந்ததும், திடீரென ரேடார் தொடர்பில் இருந்து விடுபட்டு மெடிடெரானியன் கடலில் விழுந்து நொறுங்கியிருப்பதும் தெரியவந்துள்ளது.