Home Featured தமிழ் நாடு தமிழக சட்டப்பேரவை முன்னவராக ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் நியமிக்கப்பட்டார்!

தமிழக சட்டப்பேரவை முன்னவராக ஓ.பன்னீர் செல்வம் மீண்டும் நியமிக்கப்பட்டார்!

650
0
SHARE
Ad

opsசென்னை – சட்டப் பேரவை முன்னவராக ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், அரசு தலைமைக் கொறடாவாக, அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமனங்கள் புதன்கிழமை முதல் நடைமுறைக்கு வருவதாக, சட்டப் பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

கடந்த 14 ஆவது சட்டப் பேரவையில் அவை முன்னவராக அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து, 15-ஆவது சட்டப் பேரவையிலும் அவை முன்னவராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

அவையில் முக்கிய தீர்மானங்கள் கொண்டு வருவது, முதல்வர் இல்லாத நேரங்களில் முக்கிய விவாதங்களில் அரசின் சார்பில் பதில்களைத் தெரிவிப்பது போன்ற பணிகள் அவை முன்னவரைச் சார்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.