Home Featured நாடு சிலாங்கூர் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எம்ஏசிசி கொண்டு செல்கிறார் ரபிசி!

சிலாங்கூர் அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை எம்ஏசிசி கொண்டு செல்கிறார் ரபிசி!

600
0
SHARE
Ad

Rafiziகோலாலம்பூர் – சிலாங்கூர் அரசாங்கத்தில், ‘பணம் மற்றும் பெண்களை’ வைத்து காரியம் சாதிக்க நடக்கும் பேச்சுவார்த்தைகள் குறித்து தான் எழுப்பிய குற்றச்சாட்டுகளை மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திற்கு (எம்ஏசிசி) கொண்டு செல்கிறார் பிகேஆர் பொதுச்செயலாளரும், பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான ரபிசி ரம்லி.

புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்தில் அடுத்த திங்கட்கிழமை புகார் ஒன்றைப் பதிவு செய்யவுள்ளதாக ரபிசி அறிவித்துள்ளார்.

தன்னிடம் உள்ள ஆதாரங்களை எம்ஏசிசி-யிடம் அளிக்கும் படி பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் மற்றும் அரசியல் குழுவினர் எடுத்துள்ள முடிவு குறித்தும் ரபிசி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

“சொந்த கட்சி உறுப்பினர்களோ அல்லது அவர்களின் நிர்வாகமோ தவறு செய்திருக்கும் பட்சத்தில் அத்தகவலை கையில் வைத்திருக்கும் கட்சி உறுப்பினர்கள், தங்களது செயல், கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகக் கருதப்படுமோ? என்ற கவலையின்றி நேரடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தெரிவிக்கச் சொல்வதற்கு இது ஒரு சான்று”

“கட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் உருமாற்றம் வேண்டிய தங்களது நிஜமான போராட்டத்தில் இருந்து பாதை மாறி விடக்கூடாது என்று அன்வார் இப்ராகிம் கூறியிருப்பதை நினைவுறுத்தும் வகையில் இந்த முடிவு ஒரு சிறந்த பரிசாக இருக்கும்” என்றும் ரபிசி கூறியுள்ளார்.