Home Featured கலையுலகம் நாளை வெளியாகிறது சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படம்!

நாளை வெளியாகிறது சிம்புவின் ‘இது நம்ம ஆளு’ படம்!

651
0
SHARE
Ad

Idhu-Namma-Aalu-Tamil-2016-500x500சென்னை – பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இது நம்ம ஆளு’. இப்படத்திற்கு சிம்பு தம்பி குறளரசன் இசையமைத்துள்ளார்.

பல காரணங்களாக இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில் படம் நாளை வெள்ளிக்கிழமை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

இதனால் நீண்டநாள்களாக இருந்த தடங்கல்கள், பிரச்சினைகளைத் தாண்டி படம் வெளிவருகிறது. 1350-க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாகிறது.

#TamilSchoolmychoice

இந்தப் படத்தில் நடித்தது குறித்து சிம்பு கூறியதாவது: நான் இதுபோன்ற ஒரு படம் நடித்ததில்லை. படத்தில் சண்டைக்காட்சி இல்லை. இதுபோன்ற ஒரு படத்தில் நடிப்பது எனக்கு புதிது.

இருந்தும் நடித்ததற்குக் காரணம், அதன் கதை. நானும் நயன்தாராவும் பேசிக்கொள்ளும்  காட்சிகள் இளைஞர்களுக்கு மிகவும் பிடிக்கும். இதுபோன்ற ஒரு படத்தில் புதுமுகம் நடித்தாலும் எடுபடும்.

ஒரு நட்சத்திரம் நடித்தால் இன்னும் பேசப்படும். அதனால்தான் நான் நடித்தேன். ஆன்மிகம் மீது எனக்கு ஈடுபாடு வந்துள்ளது. என்னைப் பற்றிய பல கேள்விகளுக்கு அதன்மூலம் விடை தெரிந்துகொண்டேன் என்று அவர் கூறியுள்ளார்.