Home Featured இந்தியா மம்தா பானர்ஜி பதவியேற்பு விழாவில் கனிமொழி பங்கேற்பு!

மம்தா பானர்ஜி பதவியேற்பு விழாவில் கனிமொழி பங்கேற்பு!

733
0
SHARE
Ad

Chennai: DMK Rajya Sabha MP Kanimozhi arrives for the party's high level meeting in Chennai on Wednesday. PTI Photo by R Senthil Kumar (PTI4_27_2011_000093B)

கொல்கத்தா – மேற்கு வங்க மாநில முதல்வராக 2-ஆவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி இன்று பதவியேற்கிறார். இந்த விழாவில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டுள்ளார்.

மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளார் மம்தா பானர்ஜி . அவர் இன்று அம்மாநிலத்தின் முதல்வராக 2-ஆவது முறையாக கொல்கத்தாவில் பதவியேற்றார்.

#TamilSchoolmychoice

தம்முடைய பதவியேற்பு விழாவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்டோருக்கு அழைப்பு அனுப்பியிருந்தார். அரசு பணிகள் காரணமாக தம்மால் வர இயலாது என முதல்வர் ஜெயலலிதா தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில் திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இப்பதவி ஏற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மம்தா பானர்ஜிக்கு ஏற்கனவே தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.