Home Featured உலகம் அமெரிக்க தேர்தல்: குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் தேர்வு!

அமெரிக்க தேர்தல்: குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளராக டொனால்டு டிரம்ப் தேர்வு!

617
0
SHARE
Ad

durmbவாஷிங்டன் – அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக வாஷிங்டன் மாகாணத்தில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் சர்ச்சைக்குரிய போட்டியாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

இதன்மூலம் குடியரசுக் கட்சியின் சார்பில் டிரம்ப் போட்டியிடுவது உறுதியாகிவிட்டது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதில், போட்டியிடும் குடியரசுக்கட்சி மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை தேர்வு செய்வதற்கான தேர்தல்கள் நடைபெற்று வருகிறது. ஜனநாயக கட்சியில் ஹிலாரி கிளிண்டனும், குடியரசுக் கட்சியில் டொனால்டு டிரம்பும் அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் இருந்து வந்தனர்.

#TamilSchoolmychoice

ஜனநாயக கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராவதற்கு 2,383 பிரதிநிதிகளின் வாக்குகளும், குடியரசுக் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராவதற்கு 1,237 வாக்குகளும் பெற்றிருக்க வேண்டும்.

இந்நிலையில் வாஷிங்டனில் நடந்த உட்கட்சித் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் 1,238 வாக்குகளை பெற்றுள்ளார் டிரம்ப்.

அதிகாரபூர்வ அதிபர் வேட்பாளராவதற்கு தேவைப்படும் 1,237 வாக்குகளை கடந்து விட்டதால் டொனால்டு டிரம்ப் குடியரசுக் கட்சியின் அமெரிக்க அதிபர் வேட்பாளராவது உறுதியாகியுள்ளது.

அடுத்தபடியாக, கலிபோர்னியா, நியூஜெர்சி, நியூமெக்சிகோ, மொன்டானா மற்றும் தெற்கு டகோடா ஆகிய மாகாணங்களில் வரும் ஜூன் 7-ஆம் தேதி உட்கட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.