Home Featured இந்தியா ப.சிதம்பரத்திற்கு ரூ.95 கோடி சொத்து: ராஜ்யசபா தேர்தல் வேட்புமனுவில் தகவல்!

ப.சிதம்பரத்திற்கு ரூ.95 கோடி சொத்து: ராஜ்யசபா தேர்தல் வேட்புமனுவில் தகவல்!

597
0
SHARE
Ad

p-chidambaramபுதுடெல்லி – ராஜ்யசபாவில் காலியாகும் 57 இடங்களுக்கு தேர்தல் வரும் 11-ஆம் தேதி நடக்கிறது. இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் போட்டியிடுகிறார்.

இதற்காக, நேற்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதில் தனது குடும்ப சொத்து கணக்கை தாக்கல் செய்தார். அதில் அசையும், அசையா சொத்துக்கள் என மொத்தம் ரூ. 95 கோடி என குறிப்பிட்டுள்ளார்.

சிதம்பரத்திற்கு சென்னை, டெல்லி, கர்நாடகா ஆகிய நகரங்களில் 13 வங்கிகளில் ரூ. 3.50 லட்சம் கையிருப்பும், மனைவி நளினிக்கு 6 வங்கிகளில் ரூ. 1.24 லட்சம் கையிருப்பு உள்ளதாகவும்,

#TamilSchoolmychoice

தங்கம், வைர நகைகள் , மற்றும் இருவருக்கும் தலா இரண்டு கார்கள் என மொத்தம் நான்கு கார்கள் என ரூ. 95 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.