Home Featured தொழில் நுட்பம் இன்னும் சில நிமிடங்களில் விண்வெளி நிலையத்துடன் நேரலையில் இணைகிறார் மார்க்!

இன்னும் சில நிமிடங்களில் விண்வெளி நிலையத்துடன் நேரலையில் இணைகிறார் மார்க்!

660
0
SHARE
Ad

Facebookகோலாலம்பூர் – பேஸ்புக் நேரலை வசதியை, அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் இணைக்கும் சோதனை முயற்சியை இன்னும் சில நிமிடங்களில் செய்து பார்க்கவுள்ளார் பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்.

அனைத்துலக விண்வெளி நிலையத்தில் உள்ள மூன்று விண்வெளி வீரர்களுடன், நேரலை காணொளி (Live video chat) வடிவில் இன்று புதன்கிழமை, (மலேசிய நேரப்படி மதியம் 12.55 மணியளவில்) பேசவுள்ளதாக மார்க் தனது பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அதோடு, பேஸ்புக் பயனர்கள் தங்களின் கேள்விகளையும் அனுப்பலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice