Home Featured கலையுலகம் காசோலை மோசடி வழக்கில் தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு சிறை!

காசோலை மோசடி வழக்கில் தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு சிறை!

651
0
SHARE
Ad

anubavananசென்னை – காசோலை மோசடி வழக்கில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆபாவாணனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த சென்னை சி.பி.ஐ நீதிமன்றம் ஆபாவாணனுக்கு ரூ.2 கோடியே 40 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

விஜயகாந்த் நடித்த ஊமைவிழிகள், செந்தூரப்பூவே உட்பட பல திரைப்படங்களை ஆபாவாணன் தயாரித்துள்ளார். வங்கி காசோலை மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக கூறி பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் இருவருக்க தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

வங்கி மேலாளருக்கு ரூ.15 லட்சமும், உதவி மேலாளருக்கு ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஆபாவாணன் கடந்த 1999-இல் சென்னை கத்தீட்ரல் சாலை பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு துவங்கினார்.

வங்கி சலுகையை தவறாக பயன்படுத்தி ரூ.3.31 கோடி ஏமாற்றியதாக சி.பி.ஐ அவர் மீது வழக்கு பதிவு செய்தது. வங்கியின் மேலாளர் ராஜகோபால், உதவி மேலாளர் ராமானுஜம் ஆகியோர் மீதும் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்தது.