Home Featured உலகம் சுமத்ராவில் 6.5 புள்ளி நிலநடுக்கம்! சிங்கப்பூரிலும் அதிர்வுகள் உணரப்பட்டன!

சுமத்ராவில் 6.5 புள்ளி நிலநடுக்கம்! சிங்கப்பூரிலும் அதிர்வுகள் உணரப்பட்டன!

699
0
SHARE
Ad

earthquakeஜாகர்த்தா – இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுப் பகுதியில் 6.5 புள்ளி அளவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சிங்கப்பூர் வரை அதிர்வுகள் உணரப்பட்டன.

பாடாங் பகுதிக்கு தெற்கே 155 கிலோமீட்டர் தூரத்தில்  40 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர்-மலேசிய நேரப்படி இன்று காலை 6.56 மணி அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

சுமார் 30 வினாடிகள் அதிர்வுகள் உணரப்பட்டன.

இருப்பினும் உடனடியாக சேதங்கள் குறித்த விவரங்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.