Home Featured நாடு மலேசியக் குழந்தைகள் பலரிடம் பாலியல் வல்லுறவு – பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்டு ஒப்புதல்!

மலேசியக் குழந்தைகள் பலரிடம் பாலியல் வல்லுறவு – பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்டு ஒப்புதல்!

843
0
SHARE
Ad

Richard-Huckle-paedophile-afp-0206கோலாலம்பூர் – மலேசியாவிலுள்ள ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பல குழந்தைகளிடத்தில் ஆறு மாதங்களாக பாலியல் வல்லுறுவு புரிந்ததை பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்டு ஹக்கில் (வயது 30) ஒப்புக் கொண்டுள்ளார்.

குழந்தைகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தும் போது தான் எடுத்த  சுமார் 20,000 புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை வலைத்தளம் ஒன்றில் பதிவேற்றம் செய்த போது காவல்துறையிடம் சிக்கியுள்ளார்.

ஆங்கில ஆசிரியராகத் தன்னைக் கூறிக் கொண்டு இக்குற்றங்களைப் புரிந்துள்ள ரிச்சர்டு மீது கோலாலம்பூரில் 23 குழந்தைகளிடம் பாலியல் வல்லுறவு புரிந்தது உட்பட 91 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

கடந்த 2014-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் மலேசியாவிலிருந்து கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி, பிரிட்டன் வந்த போது லண்டன் காட்விக் விமானநிலையத்தில் ரிச்சர்டு ஹக்கில் கைது செய்யப்பட்டார்.

முதலில் தன் மீதான 91 குற்றச்சாட்டுகளை மறுத்த ரிச்சர்டு பின்னர் மேல் விசாரணையில் அதில் 71 குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்டார். அக்குற்றச்சாட்டுகளில் 14 கற்பழிப்பு மற்றும் 31 பாலியல் சித்திரவதை ஆகியவை அடங்கும்.