Home Featured நாடு கோலகங்சார் : நான்கு முனைப் போட்டியில் தே.மு.வுக்கு அனுதாப வாக்குகள் விழுமா? ஆபத்தாக முடியுமா?

கோலகங்சார் : நான்கு முனைப் போட்டியில் தே.மு.வுக்கு அனுதாப வாக்குகள் விழுமா? ஆபத்தாக முடியுமா?

823
0
SHARE
Ad

கோலகங்சார் – கோலகங்சார் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் முகமட் கைரில் அனுவார் வான் முகமட்டின் துணைவியார் டத்தின் மஸ்துரா முகமட் யாசிட் தேசிய முன்னணி சார்பில் நிறுத்தப்பட்டிருப்பது ஒரு கலவையான கண்ணோட்டங்களையும், விவாதங்களையும் கோலகங்சாரில் தோற்றுவித்துள்ளது.

கணவர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதும் சரவாக் ஹெலிகாப்டர் விபத்தில் அவர் அகால மரணமடைந்ததும் மஸ்துராவுக்கு அனுதாப வாக்குகளாக மாறலாம் என்ற வியூகத்துடன் அவரை வேட்பாளராக தேசிய முன்னணி களமிறக்கியுள்ளது.

Subra-Kuala Kangsar by-election

#TamilSchoolmychoice

நேற்று நடைபெற்ற கோலகங்சார் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் கலந்து கொண்ட மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா…

ஆனால், கணவர் மறைந்த சோகத்தில் இருக்கும் மஸ்துரா பிரச்சாரத்திற்கு வரமாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு விழும் என்று எதிர்பார்க்கப்படும் அனுதாப வாக்குகள், அவருக்கே எதிராகத் திரும்பக் கூடிய அபாயமும் நிலவுகின்றது.

அதே வேளையில், கோலகங்சார் அம்னோவில் தீவிரமாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த மற்ற அம்னோ தலைவர்கள் மஸ்தூராவின் தேர்வால் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீரென அனுதாபத்திற்காக மஸ்தூரா வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதால், நீண்ட காலமாக கோலகங்சார் அம்னோவில் அரசியல் பணியாற்றிக் கொண்டிருக்கும் மற்ற தலைவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Subra-Kuala Kangsar By-election- வேட்புமனுத் தாக்கலின்போது திரண்ட மஇகாவினரோடு டாக்டர் சுப்ரா…

நேற்று நடைபெற்ற கோலகங்சார் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின்போது மஇகா தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா, மஇகா பேராக் மாநிலத் தலைவர் டத்தோ இளங்கோ ஆகியோருடன் நூற்றுக்கணக்கான மஇகா ஆதரவாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற வேட்புமனுத் தாக்கலில் தேசிய முன்னணி வேட்பாளர் டத்தின் மஸ்துரா வேட்புமனுத் தாக்கல் செய்ய வரவில்லை. அவருக்குப் பதிலாக அவரது 4 மகன்கள் அவரது வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

மஸ்துராவை எதிர்த்து பாஸ் வேட்பாளர் டாக்டர் நாஜிஹாடுஸ்சாலேஹா அகமட், அமனா வேட்பாளர் டாக்டர் அகமட் தெர்மிசி ரம்லி மற்றும் சுயேட்சை வேட்பாளர் இசாட் புகாரி ஆகியோர் களமிறங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.