Home Featured உலகம் பசில் ராஜபக்சே மீண்டும் கைது!

பசில் ராஜபக்சே மீண்டும் கைது!

628
0
SHARE
Ad

Basil-Rajapaksaகொழும்பு – முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் சகோதரர் பசில் ராஜபக்சே (படம்)  இன்று இலங்கை அரசாங்கத்தால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பசில் முன்னாள் பொருளாதார மேம்பாட்டு அமைச்சரும் ஆவார்.

இலங்கையின் நிதி குற்றவியல் புலனாய்வுப் பிரிவு இன்று அவரைக் கைது செய்தது. பண இருட்டடிப்புக் குற்றங்கள் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக முதல் கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதத்தில் இதே புலனாய்வுப் பிரிவு பசில் ராஜபக்சே-யை ஒரு நில விவகாரத்தில் கைது செய்திருந்தது.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டில், அரசாங்கப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தியது தொடர்பில், காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட பசில் சில வாரங்களைத் தடுப்புக் காவலில் கழித்தார்.