Home Featured தமிழ் நாடு மலேசியாவில் ‘வரலாற்று விழா’ – கருணாநிதிக்கு கமலநாதன் அழைப்பு!

மலேசியாவில் ‘வரலாற்று விழா’ – கருணாநிதிக்கு கமலநாதன் அழைப்பு!

780
0
SHARE
Ad

சென்னை – மலேசியாவில் முதன் முதலாக பினாங்கில் தமிழ்ப் பள்ளி அமைக்கப்பட்டு – அதன்மூலம் தமிழ்க் கல்வி மலேசியாவில் தொடங்கப்பட்டு – 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, மலேசியக் கல்வி அமைச்சும் மற்ற இயக்கங்களும் இணைந்து எதிர்வரும் அக்டோபரில் வரலாற்றுத் திருவிழா என்ற மாபெரும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து வருகின்றன.

Kamalanathan-Karunanithiகலைஞருடன் கல்வி துணையமைச்சர் கமலநாதன்….

அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதிக்கு கல்வித் துறை துணையமைச்சர் ப.கமலநாதன் அழைப்பு விடுத்துள்ளார். நேற்று சென்னையில் கலைஞரை அவரது இல்லத்தில் நேரடியாகச் சந்தித்து கமலநாதன் இதற்கான அழைப்பை விடுத்தார்.

#TamilSchoolmychoice

பின்னர் திமுக பொருளாளரும், தமிழக சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினையும் அவரது இல்லத்தில் சந்தித்து  மலேசியாவில் நடைபெறும் வரலாற்று விழாவுக்கான அழைப்பை கமலநாதன் வழங்கினார்.