Home Featured கலையுலகம் சமந்தா-நாக சைதன்யா காதல் கல்யாணத்தில் முடியுமா?

சமந்தா-நாக சைதன்யா காதல் கல்யாணத்தில் முடியுமா?

769
0
SHARE
Ad

nagachaitanya-samanthaசென்னை – நடிகை சமந்தா-நாக சைதன்யா இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளதாகவும், அது விரைவில் கல்யாணத்தில் முடியலாம் என்றும் தமிழக சினிமா வட்டாரங்களிலும், தகவல் ஊடகங்களிலும் கிசுகிசுக்கப்படுகின்றது.

சமந்தா ஏற்கனவே சித்தார்த்தைக் கல்யாணம் செய்யப் போகிறார் என ஆரூடங்கள் நிலவி வந்தது. ஆனால் இப்போது அதைப் பற்றி இருவருமே பேசுவதில்லை.

இதற்கிடையில் “நான் இப்போது தனியாக இல்லை” என்பது போன்று ஒரு கருத்தை அண்மையில் வெளியிட்டிருந்தார் சமந்தா.

#TamilSchoolmychoice

Naga Chaithanya-Samanthaஇதனைத் தொடர்ந்து மோப்பம் பிடிக்கத் தொடங்கிய தமிழகத் தகவல் ஊடகங்கள், சமந்தாவின் காதலில் விழுந்திருப்பது நாக சைதன்யா எனக் கண்டுபிடித்துத் தகவல் வெளியிட்டுள்ளன.

நாக சைதன்யா, பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் முதல் மனைவியின் மகனாவார். நாகார்ஜூனாவின் இரண்டாவது மனைவி அமலா. இவர்களுக்கு அகில் என்ற மகனும் உண்டு.

கௌதம் மேனனின் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்குப் பதிப்பில் நடிக்கும்போது சைதன்யாவும் சமந்தாவும் முதன் முதலில் சந்தித்துக் கொண்டனர்.  அதன் பிறகு அவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொண்டு வந்தாலும் காதல் அரும்பியதில்லை என்று கூறப்படுகின்றது.

பின்னர் நாகார்ஜூனா, அவரது தந்தை நாகேஸ்வரராவ், மகன் நாக சைதன்யா என அனைவரும் இணைந்த ‘மனம்’ படத்தில் மீண்டும் சைதன்யாவுடன் ஜோடி சேர்ந்தார் சமந்தா.

தற்போது மேலும் இரண்டு படங்களில் அவர்கள் இணைந்து நடிப்பது அவர்களுக்கு இடையில் ஏற்பட்டிருக்கும் நெருக்கத்தை இன்னும் அதிகமாக்கியிருக்கின்றது.

அண்மையக் காலமாக இருவரும் பொது இடங்களில் அடிக்கடி ஒன்றாகக் காணப்படுகின்றனர். இதனால் கூடிய விரைவில் கல்யாண அறிவிப்பும் வெளிவரலாம்.