Home Featured உலகம் ஹக்கிலுக்கு வாழ்நாள் சிறை – லண்டன் நீதிமன்றம் அறிவிப்பு!

ஹக்கிலுக்கு வாழ்நாள் சிறை – லண்டன் நீதிமன்றம் அறிவிப்பு!

759
0
SHARE
Ad

richardhuckleகோலாலம்பூர் – தன் மீதான 71 பாலியல் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொண்ட பிரிட்டனைச் சேர்ந்த ரிச்சர்டு ஹக்கிலுக்கு லண்டன் நீதிமன்றத்தில் வாழ்நாள் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2006 முதல் 2014-ம் ஆண்டு வரையில், 6 வயது முதல் 12 வயது வரையிலான மலேசியக் குழந்தைகளிடம் பாலியல் குற்றங்களைப் புரிந்ததை அவர் ஒப்புக் கொண்டதாக பிபிசி தெரிவித்துள்ளது.

கடந்த 2005 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் மலேசியாவில் ஆங்கில ஆசிரியராகவும், புகைப்படக் கலைஞராகவும் செயல்பட்டுக் கொண்டிருந்த போது, இக்குற்றங்களை அவர் புரிந்துள்ளது தெரியவந்துள்ளது.

#TamilSchoolmychoice

 

சுமார் 200 குழந்தைகளிடம் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டிருக்கலாம் என அவரிடம் இருந்த 20,000 பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான புகைப்படங்களின் மூலம் கணக்கிடப்பட்டுள்ளது.