Home Featured உலகம் யூரோ 2016 : சுவிட்சர்லாந்து 1 – அல்பானியா 0

யூரோ 2016 : சுவிட்சர்லாந்து 1 – அல்பானியா 0

790
0
SHARE
Ad

Euro 2016-Albania-Switzerland

பாரிஸ் – மலேசிய நேரப்படி இன்று இரவு  9.00 மணிக்கு நடைபெற்ற ஐரோப்பியக் கிண்ண காற்பந்து போட்டிகளில் அல்பானியாவுக்கும், சுவிட்சர்லாந்துக்கும் இடையிலான போட்டியில் சுவிட்சர்லாந்து 1-0 கோல் எண்ணிக்கையில் அல்பானியாவை வெற்றி கொண்டது.

இது  ‘ஏ’ பிரிவுக்கான ஆட்டமாகும். அல்பானியா ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் பங்கு பெறுவது இதுவே முதன் முறையாகும்.

#TamilSchoolmychoice

சுவிட்சர்லாந்து விளையாட்டாளர் ஃபேபியன் ஸ்சார் பந்தைத் தலையால் முட்டி கோலாக்கியதில் சுவிட்சர்லாந்து ஒரு கோல் வித்தியாசத்தில் இந்த ஆட்டத்தில் வென்றுள்ளது.

அல்பானியா அணித் தலைவர் (கேப்டன்) மற்ற விளையாட்டாளர்களுக்கு எதிராக மோசமாக ஆடியதன் காரணமாக இரண்டு முறை மஞ்சள் அட்டை பெற்று ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் ஆட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

மேலும் இரண்டு ஆட்டங்கள் இன்று நடைபெறுகின்றன.