Home Featured உலகம் யூரோ 2016: வேல்ஸ் 2 – சுலோவோக்கியா 1

யூரோ 2016: வேல்ஸ் 2 – சுலோவோக்கியா 1

635
0
SHARE
Ad

Screen Shotபாரிஸ் – பிரான்சில் இரண்டாவது நாளாக நடைபெற்றுக் கொண்டிருக்கும்  ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளில் ‘பி’ பிரிவு ஆட்டத்தில் வேல்ஸ் மற்றும் சுலோவாக்கியா நாடுகள் சனிக்கிழமை இரவு 12.00 மணிக்கு (மலேசிய நேரம்) மோதின.

ஆட்டத்தின் பத்தாவது நிமிடத்தில் வேல்ஸ் விளையாட்டாளர் பேல் தனக்குக் கிடைத்த ‘பிரி கிக்’ வகையான வாய்ப்பை கோலாக்கியதைத் தொடர்ந்து முதல் பாதி ஆட்டத்திலேயே வேல்ஸ் 1-0 என்ற கோல் எண்ணிக்கையில் முன்னணி வகித்து வந்தது.

Euro-slovakia-walesஆட்டத்தின் நடுவே பந்தை எடுப்பதில் மோதிக் கொள்ளும் வேல்ஸ் (சிவப்பு ) மற்றும் சுலோவாக்கியா (நீலம் )  விளையாட்டாளர்கள்….

#TamilSchoolmychoice

அதன் பின்னர் சுலோவாக்கியா ஒரு கோல் போட, அதனைத் தொடர்ந்து ஆட்டம் முடிய கடைசி ஒன்பது நிமிடங்கள் இருக்கும்போது, வேல்ஸ் ஒரு கோல் போட்டு 2-1 என்ற நிலையில் முன்னுக்கு வந்தது.

சுலோவாக்கியாவுக்கு இந்த ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிக்கான பிரவேசம் என்பது வரலாற்றுபூர்வ நிகழ்வாகும். காரணம், சுதந்திரம் பெற்ற பின்னர், சுதந்திர நாடாக முதன் முறையாக சுலோவாக்கியா இந்த ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் பங்கு பெறுகின்றது.