Home Featured உலகம் யூரோ 2016: இங்கிலாந்து 1 – ரஷியா 1; இங்கிலாந்து இரசிகர்கள் போலீசாருடன் மோதல்!

யூரோ 2016: இங்கிலாந்து 1 – ரஷியா 1; இங்கிலாந்து இரசிகர்கள் போலீசாருடன் மோதல்!

642
0
SHARE
Ad

Euro-England-Russai-scoreமார்சிலே – பிரான்ஸ் நாட்டின் மார்சிலே (Marseille) நகரில் நடைபெற்ற இங்கிலாந்து – ரஷியா இடையிலான ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து ஆட்டம் 1-1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி தோல்வியின்றி சமமாக முடிவடைந்தது.

இன்று அதிகாலை 3.00 மணியளவில் (மலேசிய நேரம்) இந்த ஆட்டம் நடைபெற்றது.

Euro-england-russia-playersரஷிய விளையாட்டாளர்கள்….

#TamilSchoolmychoice

முதலில் இங்கிலாந்து விளையாட்டாளர் டியர் அடித்த ‘பிரி கிக்’ பந்து கோலாக மாறியதன் விளைவாக இங்கிலாந்து 1-0 என்ற நிலையில் முன்னணி வகித்தது. இருப்பினும் ஆட்டம் முடிவடைய இருந்த நிலையில் கூடுதல் நிமிடங்களில் ரஷியாவின் வாசிலி பெரசுட்ஸ்கி அடித்த பந்தால் இரண்டு நாடுகளும் சமநிலை கண்டன.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணித் தலைவர் (கேப்டன்) அபாரமாக விளையாடித் தனது திறமையை வெளிப்படுத்தினார்.

இங்கிலாந்து இரசிகர்கள் மோதல்

Euro-england-russia-after goalகோல் அடித்த உற்சாகத்தில் இங்கிலாந்து விளையாட்டாளர்….

இதற்கிடையில் இங்கிலாந்து ரஷியா ஆட்டத்தைக் காண வந்த இரசிகர்கள் பிரான்ஸ் நாட்டின் காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்டனர். இன்னொரு பக்கம் ரஷிய காற்பந்து ஆதரவாளர்களுடனும் மோதலில் ஈடுபட்டனர்.

கடந்த இரண்டு நாட்களாக இங்கிலாந்து இரசிகர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருவது, வெள்ளிக்கிழமை தொடங்கிய ஐரோப்பியக் கிண்ண போட்டிகளுக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து இரசிகர்களைக் கலைக்க பிரான்ஸ் காவல் துறையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும், தண்ணீர் பீரங்கிகளையும் பயன்படுத்தினர்.

ஆட்டம் இறுதி நேர கோலால், சரி சமமாக முடிந்த காரணத்தால், அரங்கத்தினுள்ளே ரஷிய இரசிகர்கள் இங்கிலாந்து இரசிகர்களை நோக்கிப் பாய்ந்த போது அரங்கத்தினுள்ளும் மோதல்கள் வெடித்தன.

சில ரஷிய இரசிகர்கள் தடுப்பு வேலைகளைத் தாண்டி பாய்ந்து வந்த காரணத்தாலும், பதட்டமும், மோதல்களும் ஏற்பட்டன.

இங்கிலாந்து இரசிகர் ஒருவர் கடுமையான காயங்கள் அடைந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.