Home Featured கலையுலகம் ‘உட்தா பஞ்சாப்’ தணிக்கை விவகாரம் – உச்ச நீதிமன்றம் செல்கின்றது!

‘உட்தா பஞ்சாப்’ தணிக்கை விவகாரம் – உச்ச நீதிமன்றம் செல்கின்றது!

608
0
SHARE
Ad

புதுடில்லி – ‘உட்தா பஞ்சாப்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு எதிராகப் போராடி வரும் தரப்புகள் மும்பை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளன.

இதன் காரணமாக இந்தப் படம் வெளியிடுவதில் தொடர்ந்து சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

Udtha Punjabமும்பை நீதிமன்றத் தீர்ப்பின்படி ஒரே ஒரு வெட்டுடன் உட்தா பஞ்சாப் ‘ஏ’ (வயது வந்தவர்களுக்கு மட்டும்) சான்றிதழுடன் நாளை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

உச்சநீதிமன்ற மேல் முறையீட்டால், படம் வெளியீடு மேலும் தாமதமாகுமா என்பது நாளை வெள்ளிக்கிழமை தெரிந்து விடும்.