Home Featured உலகம் முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டான்!

முதலை இழுத்துச் சென்ற சிறுவன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டான்!

719
0
SHARE
Ad

walt-disney-world-floridaஓர்லாண்டோ – அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஒர்லாண்டோ நகரிலுள்ள வால்ட் டிஸ்னி உல்லாச கேளிக்கை மையத்தில் அங்குள்ள ஏரிக் கரையோரத்தில் விளையாடிய 2 வயது சிறுவனை நேற்று முதலையொன்று இழுத்துச் சென்றது.

அவனைத் தேடும் பணியில் ஈடுபட்ட முக்குளிப்பு  வீரர்கள் (divers) அந்த சிறுவனை சடலமாகக் கண்டெடுத்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை இரவு அந்த சிறுவன் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டபோது அவனது பெற்றோர்கள் போராடியபோதும் முதலையிடமிருந்து அவனைக் காப்பாற்ற முடியவில்லை.

#TamilSchoolmychoice

அந்த சிறுவனின் சடலம் எந்தவித சிதைவுகள் இன்றி முழுமையாக கிடைத்திருக்கின்றது. இதனால், முதலையின் தாக்குதலாலும், நீரில் மூழ்கியதாலும் அந்த சிறுவன் மரணமடைந்திருக்கிறான் என காவல் துறையினர் அறிவித்திருக்கின்றனர்.