Home Featured உலகம் யூரோ : இன்றைய ஆட்டங்கள் – மீண்டும் போர்ச்சுகலுக்காக களமிறங்கும் ரொனால்டோ!

யூரோ : இன்றைய ஆட்டங்கள் – மீண்டும் போர்ச்சுகலுக்காக களமிறங்கும் ரொனால்டோ!

573
0
SHARE
Ad

EURO 2016-LOGO-FRANCEபாரிஸ் – ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் தொடரில் இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

முதல் ஆட்டத்தில் பெல்ஜியம் அயர்லாந்து குடியரசுடன் மோதுகின்றது. இந்த ஆட்டத்தில் தோல்வியடைந்தால் புள்ளிகள் ஏதுமின்றி இருக்கும் பெல்ஜியம் ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறும் நிலைமை ஏற்படும்.

இன்றைய ஆட்டங்கள் பின்வருமாறு:-

மலேசிய நேரப்படி 

‘இ’ பிரிவு

பெல்ஜியம் – அயர்லாந்து குடியரசு (இரவு 9.00 மணி)

‘எஃப்’ பிரிவு

ஐஸ்லாந்து-ஹங்கேரி (இரவு 11.55 மணி)

போர்ச்சுகல் – ஆஸ்திரியா (ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணி)

#TamilSchoolmychoice

மற்றொரு ஆட்டத்தில் போர்ச்சுகல் ஆஸ்திரியாவைச் சந்திக்கின்றது. இந்த ஆட்டத்தில் வெற்றியடைய வேண்டிய கட்டாயத்தில் போர்ச்சுகல் இருக்கின்றது. முதல் ஆட்டத்தில் சமநிலை கண்டதால், எஃப் பிரிவில் ஒரே ஒரு புள்ளியுடன் இருக்கும் போர்ச்சுகலுக்கு வெற்றிப் பாதையை வகுத்துக் கொடுப்பாரா அதன் முன்னணி விளையாட்டாளர் கிறிஸ்டியானோ ரொனால்டோ என்பது இன்று தெரிந்து விடும்.

euro-sat-june 18-matches

மேலே ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நேரம், பிரான்ஸ் நாட்டின் உள்நாட்டு நேரமாகும்.