கோலாலம்பூர் – 4 சரவாக் மாலுமிகளையும் விடுவிக்க அபு சயாப் இயக்கம் 8.8 மில்லியன் ரிங்கிட் மட்டுமே பிணைத்தொகையாகப் பெற்றதாக நேற்று இரவு ‘மணிலா டைம்ஸ்’ செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
எனவே, மீதம் 3.2 மில்லியன் ரிங்கிட் மாயமானது குறித்து அந்த செய்தி நிறுவனம் மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் அதிகாரிகளின் மீது சந்தேகத்தையும் தெரிவித்துள்ளது.
சுலுவிலுள்ள உள்ளூர் அரசு தான் அபு சயாப் இயக்கத்தினருடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியிருப்பதாகவும் இன்னொரு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
எனினும், அந்த நால்வரையும் விடுவிக்க பிணைத்தொகை வழங்கப்படவில்லை என்பதில் மலேசியக் காவல்துறை உறுதியாக உள்ளது.