Home இயக்கங்கள் தமிழர் திருநாள் கொண்டாட்டம்

தமிழர் திருநாள் கொண்டாட்டம்

879
0
SHARE
Ad

kelab-belia

மலாக்கா, மார்ச்.18- எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 24.3.2013 காலை 8.00 மணி முதல் மதியம் 2.00 மணிவரை மெர்லிமாவ் தமிழ்ப்பள்ளியில் தமிழர் திருநாள் 2013 மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வை, மலாக்கா மாநிலத் தமிழ் இளைஞர் மணிமன்ற பேரவையும் ஜாசின் மாவட்ட ராக்கான் மூடா எஸ்டேட் மன்றமும், மெர்லிமாவ் தமிழ் இளைஞர் மணிமன்றமும் இணைந்து நடத்துகிறது.

#TamilSchoolmychoice

நமது கலாச்சாரத்தை நினைவு கூறும் வகையில் சிறப்பு நடனங்களும், போட்டி விளையாட்டுகளும் நடைபெறவுள்ளன.

அவ்வரிசையில் பாட்டுப்போட்டி, பேச்சுப்போட்டி, கோலம் போடுதல், கோலாட்டம், பல்லாங்குழி, உங்கள் திறன், தோரணம் பின்னுதல், கவிதைப் போட்டி போன்ற தமிழ், கலை, கலாச்சாரப் போட்டிகள் இத்தமிழர் திருநாளின் சிறப்பு அங்கமாகும்.

மேல் விவரங்களுக்கு, ஏற்பாட்டுக் குழு தலைவர் செல்வன் கோபிந்தராஜன் 017-6996254 மற்றும் அர்ஜூனன் 016-6356254 ஆகியோருடன் மேற்குறிப்பிட்ட தொலைபேசி எண்களின் வழி தொடர்புகொள்ளலாம்.