Home இயக்கங்கள் மலேசிய தமிழ்க் கலைஞர்களின் விருது விழா

மலேசிய தமிழ்க் கலைஞர்களின் விருது விழா

839
0
SHARE
Ad

rathana-valli-ammaகோலாலம்பூர், மார்ச்.18-எதிர்வரும் 30.3.2013 சனிக்கிழமை இரவு 8 மணி தொடங்கி பெட்டாலிங் ஜெயா சிவிக் செண்டர் ஆடிட்டோரியத்தில் மலேசிய தமிழ்க் கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவிக்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.

இவ்வாண்டு விருதுகள் தேர்வு அடிப்படையில் வழங்கப்பட விருப்பதால் கலைஞர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி அழைக்கப்படுகின்றனர்.

கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியீடு கண்டுள்ள குறுந்தட்டுகள், நகைச்சுவை நாடகங்கள், திரைப்படங்கள் போன்ற மலேசியத் தயாரிப்புகளை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

#TamilSchoolmychoice

கடந்த ஆண்டைப் போலவே இவ்வாண்டும் 10 சிறந்த கலைஞர்களுக்கு சான்றோர் விருதும் 1,000 வெள்ளி பண முடிப்பும் வழங்கப்படும்.

மலேசியத் தமிழ் கலைஞர் இயக்கம் வழங்கும் இந்த விருது மலேசிய கலைஞர்களுக்கு ஓர் அங்கீகாரமாக அமையும் என்று விருது வழங்கும் விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் கே.பழனிச்சாமி தமது பத்திரிக்கை அறிக்கையில் கூறியுள்ளார்.

இந்நிகழ்வு மனிதநேய மாமணி, ரத்னவள்ளி அம்மையார் (படம்) தலைமையில் நிகழவுள்ளது. இந்த விழாவுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த கலைஞர்களும் அழைக்கப்படவிருக்கிறார்கள்.

படைப்பாளிகள் தங்களின் தயாரிப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி:-

No.9 Jalan Kumarasamy, Batu 3 ½,

Jalan Ipoh,

51100 Kuala Lumpur.

மேல் விவரங்களுக்கு 019-2724306 என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்.