
கோலாலம்பூர் – மலேசியாவின் கலை மேடைகளில் நீண்டகாலமாக தனது பாடல்களாலும், படைப்புகளாலும் இரசிகர்களை மகிழ்வித்து வந்த சிறந்த கலைஞர் மழைவண்ணன் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 72.
சிறந்த பாடகர் என்பதோடு, நண்பர்களிடத்திலும், மக்களிடத்திலும், பண்போடும், கலகலப்போடும் எப்போதும் உற்சாகமாகப் பழகி வந்த காரணத்தால் அவருக்கு ‘மக்கள் கலைஞர்’ என்ற பட்டமும் ஒருமுறை வழங்கப்பட்டது.
மலேசியத் தமிழ்க் கலைஞர் இயக்கத்தின் தேசியத் தலைவருமான மழைவண்ணன், கலைஞர்களுக்காகவும், கலைஞர் இயக்கத்திற்காகவும் நிறைய பணிகள் ஆற்றிய கே.பழனிசாமியின் சகோதரருமாவார்.
மழைவண்ணனின் இறுதிச் சடங்குகள் இன்று புதன்கிழமை மதியம் 12.00 முதல் பிற்பகல் 2.00 மணிக்குள் கீழ்க்காணும் முகவரியில் நடைபெற்று, அதன் பின்னர் அவரது நல்லுடல் செராஸ் மின்சுடலையில் தகனம் செய்யப்படும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்திருக்கின்றனர்:
எண்: 56, ஜாலான் பண்டான் இண்டா,
தாமான் பண்டான் இண்டா, 55100 கோலாலம்பூர்
தொடர்புகளுக்கு:
016-6277409 (ஜெயகுமார்); 010-2529952 (சசிகுமார்), 019-2724306 (கே.பழனிசாமி)