Home நாடு 1எம்டிபி: நஜிப், அருள் கந்தா குற்றஞ்சாட்டப்பட்டனர்!

1எம்டிபி: நஜிப், அருள் கந்தா குற்றஞ்சாட்டப்பட்டனர்!

943
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமரும், 1எம்டிபியின் தலைவருமான டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் மற்றும் 1எம்டிபியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி அருள் கந்தா கந்தசாமியும் இன்று காலை 8:35 மணியளவில் அமர்வு நீதிமன்றம் (செசன்ஸ்) வந்தடைந்தனர். 1எம்டிபியின் கணக்கறிக்கையை மாற்றி அமைத்ததற்காக அவர்கள் இருவர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தம் மீதான இக்குற்றச்சாட்டுகளை மறுத்த அருள் கந்தா நீதிமன்றத்தில் விசாரணை கோரினார்.

ஊழல் தடுப்பு ஆணையத்தின் சட்டம் 28 (1)(சீ) பிரிவின் கீழ் அருள் கந்தா குற்றஞ்சாட்டப்பட்டார்.  20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10,000 ரிங்கிட் அபராதமும் அல்லது ஊழலாகப் பெற்றத் தொகையை காட்டிலும் ஐந்து மடங்கு அபராதமும் அவருக்கு விதிக்கப்படலாம். 500,000 ரிங்கிட் பிணையில் அருள் கந்தா விடுவிக்கப்பட்டதோடு, அவரது அனைத்துலகக் கடப்பிதழ் (பாஸ்போர்ட்) நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.

#TamilSchoolmychoice

முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் ரசாக், ஊழல் தடுப்பு ஆணையத்தின் சட்டம் 23 பிரிவின் கீழ் குற்றஞ் சாட்டப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10,000 ரிங்கிட் அபராதமும் அல்லது பெற்ற ஊழல் தொகையைக் காட்டிலும் 5 மடங்கு அபராதமும் விதிக்கப்படும்.

நீதிபதி அசூரா அல்விக்கு முன் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் இக்குற்றத்தினைச் செய்யவில்லை எனக் கூறி நஜிப் விசாரணைக் கோரினார். அவரைப் பிணையில் விடுவிக்க 1 மில்லியன் ரிங்கிட் பிணைத் தொகை விதிக்குமாறு அரசாங்க வழக்கறிஞர் கோபால் ஶ்ரீராம் வாதிட்டதற்கு, நஜிப்பின் வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்தார்.

நஜிப் ஏற்கனவே 1எம்டிபி தொடர்பாக 38 குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.